Friday, December 31, 2004

bp-78

ஆசியப்பூமிநடுக்கங்கள் 1960-2000 Posted by Hello

Asian Earthquakes 1960-2000

Thursday, December 30, 2004

bp-77

அதிர்வறிதல் Posted by Hello

Seismic Recording Station, Northeastern University, Boston; '04 Dec. 15:21 EST

Tuesday, December 28, 2004

bp-76

செய்தி Posted by Hello


NEWS

Monday, December 27, 2004

bp-75

அத்தனை உயிரிழப்புகளின் நினைவாகவும், Posted by Hello



(1997-1999 இல் ஒரு பெருநிலநடுக்கத்தின்போது எழுதியது, இன்றைக்கும் பொருந்துமென்பதால்)

மீளப் பிறந்தேன் மனிதனென...


இயற்கைத்
துயர் கொண்ட நிகழ்வுகளை
நான் நேசிக்கின்றேன்;
அவை என் கண்முன்னே நகரட்டும்;
காதுவழி விழு சங்கதியாய் அமையட்டும்..
.... நான் அறியாப்
பிறருக்கு
நேரும்
துயர் கொண்ட நிகழ்வுகளை
நான் நேசிக்கின்றேன்;


அறியாதோர் துயர்கள் என்னை
அழ வைக்கிறது;
ஆட்கள் முகம் அறியாமல்
வேதனையில்
விம்ம முடிகிறது;
உயிர்கள் படும் அவலம் மட்டுமே
என் உள்ளே விழுகிறது;

அங்கே
மதங்கள் தேயக் காண்கிறேன்!
நிறங்கள் தொலையக் காண்கிறேன்!
மொழிகள் மழுங்கக் காண்கிறேன்!
இனங்கள் இல்லாமற் காண்கிறேன்!

புயல்களில் அழியும் உயிர்களுக்காய்
மனிதப் பிரதிநிதியாய் அழ முடிகிறது.
பூகம்பத்தினால் ஒழியும் உடமைக்காரருக்காய்
உரிமையுடன் உருகி எரிய உள்ளம் விழைகிறது.
இயற்கைத்
துயர்கொண்டோர் அவலம் முன்னே,
எனக்கு முகமில்லை!
நிறமில்லை!
இனமில்லை!
மொழியில்லை!
மதமில்லை!
எவ் வகைப்படுத்தும்
இல்லவே இல்லை! இல்லை!!

எல்லோர் காதும் இடித்துரைத்தும்
மேலாய் எழுந்து எவ்வுலகும்
இந்த
ஒப்பற்ற
ஒரு சில
என் உருவமற்ற கணங்களிலே,
கைவிரிந்து
பொறிபட்டு
விண்ணதிரக் கூவவிடுங்கள்,
"நான்
இச்சகத்தின்
எல்லோருக்குமான
ஓர் எளிய பிரதிநிதி"
என்று என்னை.

இத்தகைய
இயற்கைத்
துயர் நிகழும் நேரங்களில்,
மானுடம் என்னுள்ளே
தான் வெல்லும்;
போலிவேலிகள் பொடியுண்டு
தாம் இறக்கும்;
'நான்' இறுக்கிய சங்கிலிகள்
நடுங்கிப் பிளந்து நகரும்;
கால வெளியிலே
என் உயிர்க்கால்கள்
மேவிப் பரவிக்
கசியும்,
முன்னைப்
பனிஆண்டைக் குளிரில்
விறைப்புண்ட
முகமறியா என்
ஒரு மூதாதை
இறுதிச் சோகத்துக்காய்.

என்னுளே
கருணைத்துயர்
உருகிக்கொட்டும்
இவ்வேளைகளில்
உரத்துக் கத்துவேன்:
" நான் ஒரு எளிமையான மனிதன்;
எனக்கென்றொரு உருவமில்லை;
தனியே ஒரு உள்ளமில்லை.
எதையும்
சார்ந்திரா எண்ணத்திலே,
எதையும்
சார்ந்திருக்கும் வண்ணத்திலே,
இவ் வுலகின் எல்லா மனிதரைப்போலும்
நான் இன்று இறைவனாகின்றேன்."


இயற்கைத்
துயர்கொண்டோர் அவலம் முன்னே,
எனக்கு முகமில்லை!
நிறமில்லை!
இனமில்லை!
மொழியில்லை!
மதமில்லை!
எவ் வகைப்படுத்தும்
இல்லவே இல்லை! இல்லை!!


மானிடம் வெல்க;
அதன்முன்னே,
மண் வடிவாய்,
உருக்குலைந்துடைக
இந்நாள்
மனித மத நிறங்களெல்லாம்;
தேங்கிய சிந்தனைகள்
தேய்ந்தழிந்து இறந்து போக;
திரள்க நம் மனதுகளில்
யாவரும் மனிதரென்று
ஓங்கியதோர்
உரத்த சிந்தனை.

இனியென்றும்,
இயற்கைத்
துயர்கொண்டோர்
இழிநிலை அவலம் முன்னே,
எனக்கு முகமில்லை!
நிறமில்லை!
இனமில்லை!
மொழியில்லை!
மதமில்லை!
எவ் வகைப்படுத்தும்
இல்லவே இல்லை! இல்லை!!

இன்று பிறந்தேன்
இன்னொருமுறை
என்றைக்குமாய்
நான்
மனிதனென்று.

Sunday, December 26, 2004

bp-74

சினக்கும் சினப்பும் :-)
 Posted by Hello

Snacks by Meyyappan & Snap by Karthik @ Meyyappan's Home, Nasua, NH
2004 Dec., 25 20:14 EST

Saturday, December 25, 2004

bp-73

பறவைகள் (பறவாமல்) Posted by Hello

Birds on Oak Grove Subway Station Roof; '04 Dec., 16 10:30 EST

Friday, December 24, 2004

bp-72

வண்டி விற்பனைக்கு Posted by Hello

Car Dealer @ Woburn, Massachusetts; '04 Nov., 20 12:48 EST

Thursday, December 23, 2004

bp-71

கொக்கோகலிதம் Posted by Hello


Coca Cola Vending Machine @ BJ's, Woburn, Boston; '04 Dec. 18 14:26 EST

Wednesday, December 22, 2004

bp-70

பனியும் பணியும் Posted by Hello

Post-Snowtime, Malden, Boston; '04 Dec, 21 16:05 EST

Monday, December 20, 2004

bp-69

செம்மஞ்சட்பாதைச்சுரங்கவண்டியில் ஒரு விளம்பரம், பொஸ்ரன் Posted by Hello


An Advertisement in a Subway Train, Boston; '04 Dec., 20 14:12 EST

bp-68

நத்தார் நிறங்கள் Posted by Hello

Commercial Christmas @ Market Basket, Woburn (Near Boston); '04 Dec., 18 15:11 CST

Saturday, December 18, 2004

bp-67

பிக் கே மார்ட் Posted by Hello

Big K Mart, Metford, Boston, '04 Dec. 18 11:00 EST

bp-66

பேருந்து, ஓக் க்ரோவ் சுரங்கவண்டிநிலையம் முன்னால்; 2004 டிஸெ., 16 19:09 கிநிநே. Posted by Hello

Public Transport Bus, Oak Grove, Boston; 2004 Dec. 16 19:09 EST

Friday, December 17, 2004

bp-65

நத்தார் விளக்குகள் Posted by Hello

Christmas Lights, Boston.

Wednesday, December 15, 2004

bp-64

செம்மஞ்சட்பாதைச்சுரங்கவண்டியொன்றிலே; 09 நவம்பர் 2004 12:05 கிநிநே Posted by Hello

On an Orange line subway Train, Boston 9 Nov. 2004 12:05 EST

Tuesday, December 14, 2004

bp-63

சுரங்கவண்டியிற் தூக்கம், 14 டிசெ. 2004 13:30 கிநிநே Posted by Hello

Sleeping in a Subway Train, Boston; 14 Dec. 2004 13:30 EST

Sunday, December 12, 2004

bp-62 Posted by Hello

Saturday, December 11, 2004

bp-61

மெல்ரோஸ்-மெற்போர்ட் அருகில், 11 டிஸெம்பர் 2004 15:00 கிநிநே Posted by Hello

Around Melrose-Medford, 11 Dec. 2004 15:00 EST

bp-60

மெல்ரோஸ்-மெற்போர்ட் அருகில், 11 டிஸெம்பர் 2004 15:00 கிநிநே Posted by Hello

Around Melrose-Medford, 11 Dec. 2004 15:00 EST

Tuesday, December 07, 2004

bp-59

ஓக் க்ரோவ் சுரங்கவண்டிநிலையம், பொஸ்ரன், 07, டிஸெம்பர், 2004 18:30 கிநிநே Posted by Hello

Oak Grove Subway Station, 07, Dec. 2004, 18:30 EST

Monday, December 06, 2004

bp-58

சுரங்கவண்டியின் தளத்திலே இரு துண்டுப்பிரசுரங்கள், பொஸ்டன், 06 டிஸெம்பர், 2004 Posted by Hello

Two pamphlets on an Orange Line Train Floor, Boston, 06 Dec., 2004

Friday, December 03, 2004

bp-57

கொலம்பஸ் பிளேஸ்¢ன் சாளரத்துக்கப்பால், 02 டிஸெம்பர் 2004 Posted by Hello

Beyond the Columbus Place Window, Northeastern University, Boston, 02 Dec. 2004

Thursday, December 02, 2004

bp-56 Posted by Hello